26/12/2024
1) மத்திய பிரதேச மாநிலத்தில் கென் - பெட்வா நதிகள்( யமுனை நதியின் துணை ஆறுகள்) இணைப்பு திட்டம், பிரதமர் மோடி அடிக்கல்.
1980 இல் தயாரிக்கப்பட்ட தேசிய நதிகள் இணைப்பு முனைப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் முதல் திட்டம் இது.
மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் மாநிலங்கள் நதிநீர் இணைப்பால் பயன் பெறும்.
2) முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு தினத்தையொட்டி தபால் தலை, நாணயம் வெளியீடு
3) 10,000 புதிய கூட்டுறவு சங்கங்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
( தமிழகத்தில் புதிதாக 486 கூட்டுறவு சங்கங்கள் )
4) 1924, டிசம்பர் 26,27 இல் கர்நாடக மாநிலம் பெலகாவியில் 39 ஆவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு காந்தி தலைமையில் நடைபெற்றது.
காந்தி தலைமையில் நடைபெற்ற ஒரே காங்கிரஸ் மாநாடு இது.
தற்போது இந்த மாநாட்டின் நூற்றாண்டு விழா பெலகாவியில் நடைபெற உள்ளது.
5) ஸ்வாமித்வா திட்டம்(2020) - கிராமப் பகுதியில் நில ஆய்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் வரைபடம் தயாரித்தல்.
*ட்ரோன்கள் மூலம் நில வரைபடம் மற்றும் எல்லைகள் உருவாக்கப்படும்.
6) அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலை கழுகை அறிவிக்கும் மசோதாவிற்கு அதிபர் பைடன் ஒப்புதல்
0 Comments