23/12/2024 தினமணி
1) குவைத் நாட்டின் உயரிய விருது - தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் - கபீர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 20 வது சர்வதேச விருது இதுவாகும்.
2) ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான டி20 போட்டியில்( கோலாலம்பூர்-மலேசியா) இந்தியா வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி.
3) பெஞ்சால் புயல் பாதிப்பு - அவசர தொகையாக 2000 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கோரியது தமிழக அரசு
நிரந்தர மறு சீரமைப்பு தொகையாக 6675 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கோரிக்கை.
4) அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் - ஒடுக்கப்பட்ட சமுதாய முன்னேற்றம் ( முதலீட்டில் 35 சதவீதம் தொகை மானியம், 65 சதவீத தொகை (6% வட்டி) வங்கி கடன் )
அயோத்திதாசர் குடியிருப்பு திட்டம் - ஆதிதிராவிட மக்கள் வாழும் குடியிருப்புகளை மேம்படுத்த
தொல்குடி திட்டம் - பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் ( வீடுகள் கட்டித் தரப்படும் )
5) ஜனவரி 20 இல் சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார உச்சி மாநாடு - இந்தியாவில் இருந்து 3 முதல்வர்கள் ( மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா) மற்றும் 100 CEO க்கள் பங்கேற்பு.
கருப்பொருள் : நுண்ணறிவு யுகத்திற்கான ஒத்துழைப்பு
6) ஸ்பெடக்ஸ் திட்டத்திற்காக விண்ணில் செலுத்தப்படவுள்ள பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட்டில் நான்காம் நிலையில் ( போயம் - 4 ) 24 ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன.
பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035க்குள் விண்வெளியில் அமைக்க திட்டம்
0 Comments