நடப்பு நிகழ்வுகள்

அக்டோபர் 30, 2023
தினமணி , இந்து தமிழ் திசை


1) காஜின்ட் – 2023 ( நடைபெறும் இடம் – கஜகஸ்தான் )

இந்தியா – கஜகஸ்தான் கூட்டு இராணுவ பயிற்சி. 

 (2016 இல் பிரபால் டோஸ்டைக் என்ற பெயரில் இந்த பயிற்சி தொடங்கப்பட்டது. பின்னர் காஜின்ட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


2) 2047க்குள் சுமார் 30 ட்ரில்லியன் டாலர் ( 2500 லட்சம் கோடி ) மதிப்பு கொண்ட பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றும் தொலைநோக்கு திட்டம் தயாரிக்கப்படுகிறது – நிதி ஆயோக் CEO – PVR. சுப்ரமணியம்


3) இந்திய ரயில்வேயின் பிரத்தியேக சரக்கு பாதை திட்டம்(DFC)

இந்தத் திட்டத்தின் கீழ் சரக்கு ரயில்கள் மட்டும் செல்ல தனி இருப்பு பாதை அமைக்கப்படும்.

வடக்கை கிழக்கு மேற்கொண்டு இணைக்க 1.2 லட்சம் கோடி செலவில் 7 மாநிலங்கள் 77 மாவட்டங்களை இணைக்கும் மாபெரும் திட்டம்


4) Knit India , through literature என்ற திட்டத்தை செயல்படுத்தி வருபவர் – தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி

இந்தத் திட்டம் மூலம் 18 இந்திய மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களை சிவசங்கரி மொழியாக்கம் செய்துள்ளார்


5) கடந்த 40 ஆண்டுகளாக நாட்டுப்புற கலை வடிவங்களை தனது புத்தகங்களில் எழுதி வருபவர் – ஏ.கே.பெருமாள்.


6) பழங்குடிகள் பெருமை தினம் - நவம்பர் 15 ( ஜார்க்கண்டை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிர்ஷா முண்டாவின் பிறந்தநாள் )


7) நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான மேரா யுவபாரத் திட்டம் ( எனது இளைய பாரதம் ) நாளை தொடங்கப்பட உள்ளது.


Post a Comment

0 Comments

Close Menu