பாங்காக்கில் நடந்துவரும் ‘தாய்லாந்து சர்வதேச குத்துச்சண்டை’ போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஷ்யாம் குமார் 49 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இவர் 2015-ம் ஆண்டு நடந்த சர்வதேசப் போட்டியிலும் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தான் வீரர் தஸ்மதாவ்-க்கு எதிராக விளையாடி இவர் வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல 64 கிலோ எடைப் பிரிவில் மற்றொரு இந்திய வீரர் ரோஹித் டோகாஸ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவரும் 2015-ம் ஆண்டு நடந்த சர்வதேசப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.
7 பேர் கொண்ட குழுவாக சென்ற இந்திய அணி ‘தாய்லாந்து சாம்பியன்ஷிப்’ போட்டியில் இரண்டு பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தது.
0 Comments