நடப்பு நிகழ்வுகள்

 7/10/2025

தினமணி, இந்து தமிழ் திசை


1) மருத்துவத்திற்கான நோபல் பரிசு மேரி இ பிரன்கோவ், ப்ரெட் ராம்ஸடெல், ஷிேமான் சகாகுச்சி ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

உடல் உறுப்புகளை நோய் எதிர்ப்பு செல்கள் தாக்காமல் தடுத்து முறைப்படுத்தும் டி செல்கள் கண்டுபிடிப்பிற்காக வழங்கப்படுகிறது 


2) நாட்டின் இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான INS ஆந்த்ரோத்  கடற் படையில் இணைக்கப்பட்டது


3) நாட்டில் நெல் சாகுபடி பரப்பளவு 448.58 லட்சம் ஹெக்டேராக (1.35%) அதிகரித்துள்ளது. 

இதேபோல் பருப்பு, கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. பருத்தி சாகுபடி பரப்பு குறைந்துள்ளது (அக்டோபர் 2025 நிலவரப்படி)


4) பிரான்ஸ் பிரதமர் சபாஸ்டியன் லெக்கார்னா  பதவி விலகினார். 

5) ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் நாட்டின் இரண்டாவது பாகன்களுக்கான பிரத்தியேக கிராமத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

Post a Comment

0 Comments

Close Menu