31/12/2024
1) இஸ்ரோவின் SPADEX - (Space Docking Experiment) திட்டத்தின் கீழ் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணி வெற்றி.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தின் முன்னோட்ட முயற்சியாக SPADEX A,B என்ற இரட்டை விண்கலங்களுடன் பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும்போது ஒரு விண்கலத்தில் இருந்து மற்றொரு விண்கலத்திற்கு மாறவும் எரிபொருளை மாற்றிக் கொள்ளவும் இந்த தொழில்நுட்பம் உதவும்.
2) புதுமை பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தூத்துக்குடியில் முதல்வர் தொடங்கி வைத்தார்
6 - 12 ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்படும்.
3) செப்டம்பர் மாதம் நிலவரப்படி இந்தியாவின் வெளிநாட்டு கடன் 60.53 லட்சம் கோடி
4) மத்திய ரிசர்வ் காவல் படை ( CRPF ) புதிய தலைமை இயக்குனர் ஆக விதுல் குமார் நியமனம்(அனீஸ் தயாள் சிங் ஓய்வு)
5) அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்
6) உலகின் முதல் நாடாக பசிபிக் தீவில் உள்ள கிரிபாட்டி தீவுகளில் புத்தாண்டு பிறந்தது (2025)
0 Comments