அக்டோபர் 7, 8
1) இந்தியாவில் முதல்முறையாக உலக கவிஞர்கள் மாநாடு மதுரையில் நவம்பர் 21-ல் தொடங்க உள்ளது.
2) கலைஞர் நூற்றாண்டு பூங்கா ( 25 கோடி) தொடங்கப்பட்டுள்ள இடம் - சென்னை
3) இந்திய கடற்படையும், இந்திய கடலோர காவல் படையும் ஓமன் ராயல் கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளது.
நீண்ட தூர பயிற்சிக்காக இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சி படைப்பிரிவு திர், ஷர்துல் கப்பலிலும் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் வீரா கப்பலிலும் பயணித்து ஓமன் செல்ல உள்ளனர்.
4) இந்திய விமானப்படை தலைமை தளபதி - மார்ஷல் ஏபி(அமர் பிரீத்) சிங்
5) இந்தியா மாலத்தீவு இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து.
மாலத்தீவில் இந்தியாவின் ரூபே சேவை, புதிய விமான ஓடுதளம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாலத்தீவு அதிபர் முகமது மூவிஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மாலத்தீவிற்கு இந்தியா 6359 கோடி நிதி உதவி.
6) மருத்துவத்திற்கான நோபல் பரிசு - விக்டர் ஆம்புரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இரண்டு அமெரிக்கர்களுக்கு அறிவிப்பு.
மனித உடலில் மரபணு செயல்பாடு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அறிவதற்கு அடிப்படையான மைக்ரோ ஆர்என்ஏ என்ற மூலக்கூறு கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கரோனா பாதிப்புக்கு எதிரான பயனுள்ள M-RNA தடுப்பூசி உருவாக்கியதற்காக கேட்டலின் கரிக்கோ, ட்ரூ வீஸ்மேன் ஆகிய இருவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
7) தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐநா அமைப்பின் United nation in the agency task force award என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொற்றா நோய்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் 2021 ஆகஸ்ட் 5ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது.
8) இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் இடையே 2 பில்லியன் டாலர்கள் ( சுமார் 16,800 கோடி) செலவில் உணவு வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
9) ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் ஓய்வு அறிவிப்பு.
10) பரோடா வங்கியின் உலகளாவிய விளம்பர தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமனம்.
0 Comments