நடப்பு நிகழ்வுகள்

 அக்டோபர் 9 

1) ஹரியானா தேர்தலில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி.

  ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி

2) 70 ஆவது தேசிய திரைப்பட விருது 2022 -

  தமிழில் மணிரத்னம்( 7 ஆவது முறை தேசிய விருது )  இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் மட்டும் சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு (ரவிவர்மன்), சிறந்த பின்னணி இசை (ஏ.ஆர்.ரகுமான் - 7 ஆவது முறை தேசிய விருது), சிறந்த ஒலி வடிவமைப்பு ஆகிய 4 பிரிவுகளில் தேசிய விருதை பெற்றுள்ளது.


சிறந்த நடிகை - நித்யா மேனன் ( திருச்சிற்றம்பலம் திரைப்படம் ), 

சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி ( காந்தாரா )

3) ஆசியான்-இந்தியா இடையேயான 21வது உச்சி மாநாடு மற்றும் 19 ஆவது கிழக்காசிய உச்சி மாநாடு லாவோசின் வியன்டியன் நகரில் நடைபெற உள்ளது. 

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஆசியான் கூட்டமைப்பில் 10 நாடுகள் உள்ளன.

இந்தக் கூட்டமைப்புக்கு நடப்பாண்டு லாவோஸ் தலைமை வகிக்கிறது.

4) இயற்பியலுக்கான நோபல் பரிசு - ஜான் ஹாப்பில்டு, ஜியோ பெர்ரி கிண்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயற்பியல் கூறுகளில் இருந்து சக்தி வாய்ந்த இயந்திர கற்றலுக்கான ( mission learning )  அடிப்படை நடைமுறைகளை மேம்படுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

கடந்தாண்டு எலக்ட்ரான் குறித்த ஆய்வுக்காக அன்னி கூலியர், பீரி அகோஸ்டினி, பெரங் கிரவுள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.


5) புவி கண்காணிப்புக்காக ஏவப்பட்ட இமேஜிங் செயற்கை கோளான கார்டோசாட் - 2 டி உட்பட 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய pslv C 37 ராக்கெட் மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்பட்டு கடலில் விழவைக்கப்பட்டது...



Post a Comment

0 Comments

Close Menu