நடப்பு நிகழ்வுகள்

அக்டோபர் 6 ( தினமணி, இந்து தமிழ் திசை )


1) மலபார் கடல் சார் பயிற்சி 2024 - விசாகப்பட்டினம் 

     1992 இல் இந்தியா அமெரிக்கா இருதரப்பு கடல்சார் பயிற்சியாக தொடங்கப்பட்டது. 

    பின்னர் இதில் ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் இணைந்தன


2) 4 ஆம் தலைமுறை தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மிகக் குறுகிய தொலைவு வான் பாதுகாப்பு ஏவுகணை (விசோர்ட்ஸ் ) சோதனையை drdo வெற்றிகரமாக நடத்தப்பட்டது.


3) ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. 


4) சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிக்கு மத்திய அரசு 65% நிதியை வழங்க உள்ளது. மேலும் இது மத்திய துறை திட்டம் எனவும் செயல்படுத்தப்படும்.

   இதற்கு முன்னர் 90 சதவீதம் தமிழக அரசு நிதியுடன் மாநில அரசு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வந்தது.


5) தமிழகத்தில் பேறுகால இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் ஆகியவற்றை பூஜ்ஜியம் நிலைக்கு கொண்டு வர 4 புதிய திட்டங்கள் தொடக்கம் 

      தற்போது தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 1000 பேருக்கு 8 என்ற விகிதத்தில் உள்ளது. 

      தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் 1 லட்சம் பேருக்கு 40.2ஆகவும் இந்திய அளவில் 97 ஆகவும் உள்ளது.


5) தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் தலைமை பண்பை வளர்க்கும் வகையில் மாணவர்களின் குழு அமைப்பு மகிழ் முற்றம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

Post a Comment

0 Comments

Close Menu