நடப்பு நிகழ்வுகள்

அக்டோபர் 3,4

1) தமிழ்நாடு SC/ST ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ் தமிழ்வாணன் நியமனம்.

2) மகப்பேறு இறப்பு விகிதம் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 76 என்ற விகிதத்தில் உள்ளது.

தமிழகத்தில் இந்த விகிதம் 46 ஆக உள்ளது.

• தமிழ்நாட்டில் முழுமையாக மகப்பேறு இறப்பு விகிதம் இல்லாத மாவட்டங்களாக விழுப்புரம் மற்றும் விருதுநகர் அறிவிக்கப்பட்டுள்ளது

3) PMRKVY ( பிரதமரின் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் ) - நிலையான விவசாயத்தை ஊக்குவித்தல் மற்றும்

KY ( கிருஷோன்னதி திட்டம் ) - உணவு பாதுகாப்பில் தன்னிறைவு அடைதல் ஆகிய இரு புதிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

4) வங்கம், மராத்தி, பிராக்கிருதம், அசாமி, பாலி ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

• மகாராஷ்டிரம் – மாராத்தி

• பீகார், உ.பி & ,ம.பி – பாலி, பிராக்கிருதம்

• மேற்கு வங்கம் – வங்க மொழி

• அசாம் – அசாமி

• தமிழ் ( 2004 ) - முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது

• சமஸ்கிருதம் – 2005

• தெலுங்கு, கன்னடம் – 2008

• மலையாளம் - 2013

• ஒடியா – 2014

5) ஓவியம் மற்றும் சிற்பக் கலையில் சாதனை படைத்த 6 பேருக்கு கலைச்செம்மல் விருது - தமிழக அரசு அறிவிப்பு

6) முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் 3 நகரங்களில் நடத்தப்பட்ட மாநாடுகள் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் – 1.90 லட்சம் கோடி

• பின்னர் UAE, சிங்கப்பூர்,மலேசியா,ஜப்பான்,அமெரிக்கா,ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்து பெறப்பட்ட முதலீடுகள் – 19000 கோடி

• பின்னர் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாநாடு மூலம் பெறப்பட்ட தொகை – 6.64 லட்சம் கோடி

( முதலீடுகளின் நோக்கம் - 2030க்குள் தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுதல் )

7) மகளிர் ஐசிசி டி20 - ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடக்கம்.

Post a Comment

0 Comments

Close Menu