நடப்பு நிகழ்வுகள்


அக்டோபர் 1

1) சர்வதேச முதியோர் தினம் - அக்டோபர் 1

• கருப்பொருள் : தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பு.

2) தன்னார்வ ரத்ததான தினம் - அக்டோபர் 1.

• ரத்த மையங்களை கண்காணிப்பதற்காக e-RaktKosh என்ற இணையதளம் செயல்பாட்டில் உள்ளது.

3) தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது(2022) – நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

• இவர் நிகழாண்டுக்கான பத்மபூஷன் விருது பெற்றுள்ளார்.

2021 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர் – நடிகை வகிதா ரஹ்மான்

4) நிகழ் நிதியாண்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.35000 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு.

5) இந்தியாவில் சராசரியாக ஒருவருக்கு 1500 கியூபிக் மீட்டர் தண்ணீர் கிடைக்கிறது.

• தமிழ்நாட்டில் தனி ஒருவருக்கு 900 கியூபிக் மீட்டர் தண்ணீர் கிடைக்கிறது.

• ஒரு ஆண்டுக்கு தமிழகத்திற்கான தண்ணீர் தேவை 2000 டிஎம்சி. ஆனால் கிடைப்பது 1700 டிஎம்சி மட்டுமே.

6) செப்டம்பர் 30 நிலவரப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை – 67

• சென்னை

உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி - கே ஆர் ஸ்ரீராம்.

7) அமைச்சரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மூன்றாவது இடம்.

• இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு திட்டம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

• முதல் மற்றும் இரண்டாம் இடங்கள் முறையே முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் உள்ளனர்.

8) நாட்டுப் பசு மாடுகளை ராஜமாதா - கோமாதா என்று அறிவித்து அதன் பாதுகாப்புக்கு நிதி திட்டத்தையும் மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது


Post a Comment

0 Comments

Close Menu