தினமணி ( 29/09/2024 )
1) தமிழகத்தின் 3 ஆவது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு உள்ளார்.
- தமிழகத்தின் முதல் துணை முதல்வராக 2009 இல் முக.ஸ்டாலின் பதவி வகித்தார்.
- பின்பு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் திணை முதல்வராக இருந்தார்.
2) ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள சிப்காட்டில் 9000 கோடி முதலீட்டில் டாட்டா மோட்டார்ஸ் வாகன தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
- 1973 இல் நாட்டின் முதல் சிப்காட் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் ராணிப்பேட்டையில் தொடங்கப்பட்டது.
3) நிகழாண்டுக்கான சிறந்த 36 சுற்றுலா கிராமங்கள் தேர்வு.அதில்
- சாகச சுற்றுலா - அரு ( ஜம்மு காஷ்மீர்)
- வேளாண் சுற்றுலா - குமரகம் ( கேரளா )
- கைவினை - பிரான்பூர் (ம.பி)
- பாரம்பரியம் - ஆண்ட்ரோ (மணிப்பூர்)
- பொறுப்பு மிக்க சுற்றுலா தளம் - தார் கிராமம் ( லடாக் ) ஆகியவை அடங்கும்.
0 Comments