நடப்பு நிகழ்வுகள்

 

தினமணி, 5,6/7/2024

1)     இணைய பாதுகாப்பை ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாபிரிட்டன் இடையே உடன்பாடு.

2)     இந்தியா, சீனா,ரஷ்யா,பாகிஸ்தான் உள்ளிட்ட 9 நாடுகள் இடம் பெற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 24 ஆவது மாநாடு கஜகஸ்தான் தலைநகர் அஸ்தனாவில் தொடங்கியது.

3)     பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 28 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு ( 5 பேர் தமிழர்கள்)

4)     பிரிட்டனின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் கியெர் ஸ்டர்மர் பொறுப்பேற்றார்.

·       தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தை போலவே காலை உணவு திட்டம், நான் முதல்வன், கலைஞர் கனவு இல்லம் போன்ற திட்டங்கள் அறிமுகம்.

·       பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த உமா குமரன் ( MP) வெற்றி பெற்றுள்ளார்.

5)     செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலியில் 147 கலைச்சொற்கள் ஏற்பு.

·       Antenna diversity – பன்முக அலைவாங்கி, app code – செயலிக்குறி, artificial taste – செயற்கைச் சுவை, audio player – ஒலி இயக்கி, augmentation system – துல்லிய இடங்காட்டி, beefingup – வலுவூட்டல்,பேர்போன ஏய்ப்பு செயல்.

6)     Stainless Steel சமையல் உபகரணங்கள் மீது ஐஎஸ் 14756:2022, என்று குறியீடும், அலுமினிய சமையல் உபகரணங்கள் மீது 1660:2024 என்று குறியிடும் இடம் பெற வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு.

7)      வீர தீர விருதுகள் 2024

·       கீர்த்தி சக்ரா – 10 பேர்

·       சௌரிய சக்ரா – 27 பேர்

 

Post a Comment

0 Comments

Close Menu