டிசம்பர் 9, 2023
தினமணி, இந்து தமிழ் திசை
1) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை எம்.பி மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
- மக்களவைத் தலைவர் – ஓம் பிர்லா.
2) மார்ச் 2024 வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை.
3) மிசோரம் முதல்வராக பதவி ஏற்றவர் – லால்டு ஹோமா
- மிசோரம் ஆளுநர் – ஹரி பாபு
4) வங்கிகளுக்கான ரெப்போ ரேட் – 6.50 % ஆக தொடர்கிறது.
- RBI ஆளுநர் – சசிகாந்த தாஸ்.
5) மருத்துவமனைகள் கல்வி நிறுவனங்களில் 5 லட்சம் வரை யுபிஐ வழியே பணம் செலுத்த ஆர்பிஐ அனுமதி வழங்கியுள்ளது.( இந்த வரம்பு முன்பு 1 லட்சம் ஆக இருந்தது ).
6) உலக செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை – 28 நாடுகள்
- தொடக்கம் – 2020 ( தற்போதைய தலைமை – இந்தியா )
7) உலக முதலீ்ட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் எங்கு தொடங்கி வைத்தார் – டேராடூன் - உத்தரகாண்ட்.
8) ஆதித்யா L1 கருவி முதல் முறையாக சூரியனை படம்( சூட் கருவி மூலம்) பிடித்துள்ளது.
- PSLV C-57 ராக்கெட் மூலம் செப்.2 ஆம் தேதி ஆதித்யா L1 விண்கலம் அனுப்பப்பட்டது.
9) நீரிழிவு நோய்க்கான ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக மருத்துவர்.வி.மோகனுக்கு லட்சுமிபத் சிங்கானியா விருதை குடியரசுத்தலைவர் வழங்கினார்.
10) ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் ஏற்றுமதியாளர்களுக்கு கடனளிக்கும் வட்டி சமநிலை திட்டத்திற்கு கூடுதலாக 2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டம் 2015 ஏப்ரல் 1 இல் தொடங்கப்பட்டது
11) குன்னூரில் முப்படை தளபதி பிபின் ராபத்தின் நினைவு தூண் திறக்கப்பட்டுள்ளது
0 Comments