டிசம்பர் 5, 2023
தினமணி, இந்து தமிழ் திசை
1) மிக்ஜம் புயல் பெயர் வைத்த நாடு – மியான்மர்.
பொருள் : வலிமை;
மீள்தன்மை, விரியும் திறன் (Strength or Resilience)
2) மிசோரம் தேர்தல் – ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது
3) குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் சுவாமி கோவிலில் பழமையான 5 செப்பு பட்டயங்கள் கண்டுபிடிப்பு.
4) மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் சத்திரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்.
சத்ரபதி சிவாஜியின் அரச முத்திரையை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டு இந்திய கடற்படைக்கு புதிய கொடியை பிரதமர் அறிமுகம் செய்தார்.
5) சமக்கா சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் – தெலுங்கானாவில் அமைய உள்ளது.
6) வழக்கறிஞர்கள் சட்ட திருத்தம் மசோதா மக்களவையில் நிறைவேற்றம். ( ஊழலை ஒழிக்க…)
7) மோட்டார் வாகனச் சட்டம் 2019ல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு கட்டணம் இல்லா சிகிச்சை அளிக்க மத்திய அரசு திட்டம்.
8) 125 ஆண்டுகள் பழமையான இந்திய தபால் அலுவலக சட்டத்திற்கு பதிலாக புதிய தபால் அலுவலக மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்.
தபால் அலுவலகம் மூலம் அனுப்பப்படும் கடிதம், பொருள் உள்ளிட்டவற்றை இடைமறிக்க, திறந்து பார்க்க அல்லது நிறுத்தி வைக்க எந்த ஒரு அதிகாரிக்கும் மத்திய அரசு அதிகாரம் வழங்கலாம்.
0 Comments