டிசம்பர் 2, 2023
தினமணி, இந்து தமிழ் திசை
1) சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது – உச்ச நீதிமன்றம்.
- விதி 200இன் படி 3 தேர்வுகள் மட்டுமே ஆளுநருக்கு உள்ளது.
- ஒப்புதல் அளிக்கலாம், நிறுத்தி வைக்கலாம், குடியரசு தலைவருக்கு அனுப்பலாம்.
2) இந்திய கடற்படை தினம் – டிசம்பர் 4
- கடற்படை கப்பலில் முதல் முறையாக பெண் கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை தளபதி ஆர்.ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.
3) மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரிக்கு ராணுவ படை பிரிவுகளுக்கான உயர் விருதான பிரசிடென்ஸ் கலர் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
4) COP 28 மாநாட்டில் பசுமை கடன் திட்டத்தை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி.
- பசுமை கடன் திட்டம் :
பாழடைந்த தரிசு நிலங்களில் மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் திட்டம்
0 Comments