நவம்பர் 19 , 2023
தினமணி, இந்து தமிழ் திசை
1)தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியால் திருப்பி அனுப்பப்பட்ட உயர்கல்வி தொடர்பான 10 மசோதாக்களும் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டன.
2)தமிழகத்தை சேர்ந்த முன்னாள் RBI ஆளுநர் எஸ் வெங்கடரமணன் மறைவு.
3)பாரம்பரிய துணை மருத்துவ திட்டங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஆயுஷ் அமைச்சகம் மற்றும் WHO புரிந்துணர்வு ஒப்பந்தம்.
இதற்கென பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய திட்டம் 2025-34 என்ற ஆவணம் WHO ஆல் தயாரிக்கப்படும்
யோகா ஆயுர்வேதம் பஞ்சகர்மா யுனானி போன்றவற்றை உலக அளவில் எடுத்துச் செல்ல முதல் ஒப்பந்தமும், இவற்றை வலுப்படுத்த இரண்டாவது ஒப்பந்தமும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
4) இந்தியா ஆஸ்திரேலியா இடையே முதல் கட்ட 2+2 பேச்சுவார்த்தை 2021 செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
5) உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து - 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்
6) மக்களவையில் இதுவரை 713 தனிநபர் மசோதாக்கள் தேக்க நிலையில் உள்ளன.
0 Comments