நவம்பர் 20, 2023
தினமணி, இந்து தமிழ் திசை
1)அகமதாபாத்தில் நடைபெற்ற 13 வது ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 6 வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 6 ஆவது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன் கோப்பை வென்றது.
ஆட்டநாயகன் விருது - டிராவிஸ் ஹெட் ( ஆஸ்திரேலியா)
தொடர்நாயகன் – விராட் கோலி ( இந்தியா )
2)திருநெல்வேலி அத்தாளநல்லூர் பெருமாள் கோயிலில் பாண்டியர், சோழர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.
3) உலக செம்மொழி தமிழ் சங்கத்தின் பன்னாட்டு மாநாடு சென்னையில் ஜனவரி 5 - ல் நடைபெற உள்ளது
4)அதிக மகசூல் தரும் உயர்தர நறுமணமிக்க ஜோகா, அரிசி ரகத்தை மேம்படுத்த அசாம் அரிசி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனம் கடந்த ஆண்டு அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்ட ஊதா நிற லாவண்யா அரிசி ரகத்தை உருவாக்கியது.( ரஞ்சித், பகதூர் அரிசி ரகத்தையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது )
5) பிரபஞ்ச அழகி 2023 – ஷெய்னிஷ் பலாசியோஸ் (USA – நிகரகுவா )
(84 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் )
பிரபஞ்ச அழகி 2022 – ஆர்பானி கேப்ரியல் ( USA)
6) ஹலால் சான்று பெற்ற பொருளுக்கு உத்தரப்பிரதேச அரசு தடை விதித்துள்ளது.
(ஐஎஸ்ஐ), FSSAI தரச்சான்று மட்டுமே சட்டபூர்வமானது.
ஹலால் தரச் சான்று நடைமுறை சட்டவிரோதமானது.
( ஹலால் – அனுமதிக்கப்பட்டவை, ஹராம் – தடை )
0 Comments