நவம்பர் 17 , 2023
தினமணி, இந்து தமிழ் திசை
1) சட்டப்பேரவை விதி 143 – பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதா ஒன்றை ஆளுநர் திருப்பி அனுப்பும் நிலையில் அந்த மசோதா குறித்து விவாதிக்க சட்டப்பேரவை கூட்டத்தை பேரவை தலைவர் கூட்டம் முடியும்
பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்ததாலும் முடித்து வைக்கப்படாமல் இருப்பதாலும் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட ஆளுநரின் ஒப்புதல் தேவை இல்லை
2) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன
3) உரிய ஆவணங்கள் இன்றி பிரிட்டன் வரும் அகதிகளுக்கு உரிய அனுமதி வழங்கும் வரை ருவாண்டா வில் தங்க வைக்க பிரிட்டன் முடிவு
4) ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு – அமெரிக்கா
5) சமீபத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் 10 லட்சம் மக்கள் தொகைக்கு எத்தனை எம்பிபிஎஸ் இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளது – 100 இடங்கள் ( 2025-26 இல் அமல்)
6) வங்கக்கடலில் உருவாக உள்ள புதிய புயலுக்கு மிதிலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது ( மாலத்தீவு மிதிலி பெயரை பரிந்துரைத்தது)
7) சிதம்பரம் பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு அரசு எந்த ஆண்டு தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்தது - 2013
0 Comments