நடப்பு நிகழ்வுகள்

 5/2/2025


1) தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் - சென்னையில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாடு 3.0இல் முதல்வர் அறிவிப்பு


2) 38 வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் ஜனவரி 28 அன்று பிரதமர் தொடங்கி வைத்தார். 

இவ் விளையாட்டு போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னம் - மோனல் ( இமயமலையில் காணப்படும் மாநில பறவை)

கருப்பொருள் - பசுமை விளையாட்டு போட்டி 


3) தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய ககன்தீப் சிங் பேடி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைப்பு


1.4.2003 மாநில அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம். 


தற்போது பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய இக்குழு அமைக்கப்பட்டுள்ளது 



4) முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்களுக்கான பிரத்தியேக இணையப்பக்கம் - கலைஞர் கருவூலம் 



5) எதிரி நாட்டுப் போர்க்கப்பல்களை  தாக்கி அளிக்கும் யோபுக்களை கொள்முதல் செய்ய ரஷ்யா உடன் இந்தியா ஒப்பந்தம் 


6) பொது சிவில் சட்ட தேவையை ஆராய  உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 ஐந்து பேர் கொண்ட குழு வை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார் 

Post a Comment

0 Comments

Close Menu