டிசம்பர் 13,
2023
தினமணி மற்றும் இந்து தமிழ் திசை
1) ராஜஸ்தான் புதிய முதல்வர் – பாஜன்லால் சர்மா ( பாஜக )2
- துணை முதல்வர்கள் தேர்வு.
- ராஜஸ்தானில் உள்ள தொகுதிகள் – 199
- ராஜஸ்தான் ஆளுநர் – கல்ராஜ் மிஸ்ரா
2) தலைமை தேர்தல் ஆணையர் பிற தேர்தல் ஆணையர்கள் ( நியமனம், பணி நிபந்தனைகள், பதவிக்காலம் ) மசோதா – 2023 ஆகஸ்ட் 10 அன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நேற்று நிறைவேற்றபட்டது.
- 1991 இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம் உள்ளிட்டவை இடம் பெறவில்லை.
3) இந்தியாவில் மருத்துவர் - மக்கள் தொகை விகிதம் 1:834
செவிலியர் – மக்கள் தொகை விகிதம்
1:476
4) ஆகஸ்ட் 23 – தேசிய விண்வெளி தினம்
- நிலவின் தென் துருவ பகுதியில் சந்திராயன் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய தினம்.
- இந்தியாவின் விண்வெளி மையம் இலக்கு – 2035
- நிலவிற்கு மனிதர்களை 2040க்குள் அனுப்ப முடிவு – இஸ்ரோ
5) மத்திய அரசு ஊழியர்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து விருதுகளை பெறுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட ஆணையத்திடம் அனுமதி பெறுவது கட்டாயம் என்ற புதிய நடைமுறை வெளியீடு.
- மத்திய குடிமை பணிகள் நடத்தை விதிகள் 1964 விதி 14.
6) ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி யூனியன் பிரதேசம் பெண்களுக்கு பேரவைகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.
- ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு( 2 ஆவது திருத்த மசோதா ) சட்ட மசோதா – 2019,
- யூனியன் பிரதேச அரசுகள்( திருத்த மசோதா ) சட்டம் – 1963
- 106 வது சட்ட திருத்தம் – மக்களவை, மாநில பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குதல்.
7) குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட 3 மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டு, திருத்தங்களுடன் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
- பாரதிய நியாய சம்ஹிதா – இந்திய தண்டனைச் சட்டம் 1860
- பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா – குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898,
- பாரதிய சாட்சிய அதினியம் – இந்திய சாட்சியச் சட்டம் 1872
- பாரதிய நியாய சம்ஹிதா மசோதாவில் பயங்கரவாதம் என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் பொருளாதார பாதுகாப்பு என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது.
- மேலும் நீதிமன்ற அனுமதி இல்லாமல் பாலியல் வன்கொடுமை குற்றங்களால் பாதிக்கப்படுபவரின் அடையாளங்களை வெளியிடுவோர் மீது அபராதத்துடன் சிறை தண்டனை ( 2 ஆண்டு ) விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
0 Comments