சீன அதிபராக ஜி ஜின்பிங் இரண்டாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
சீனாவின் அரசியல் அமைப்புச் சட்டப்படி ஐந்து ஆண்டுகள் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். அதன் பிறகு அதிபர் பதவியில் இருந்து அவர் விலகிவிட வேண்டும்.
இந்நிலையில் கடந்த 2013 மார்ச் மாதத்தில் சீன அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி ஜின்பிங் அவரது பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் இன்று தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த கட்சி மாநாட்டில் இரண்டாவது முறையாக ஜி ஜிங்பிங் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 2,970 ஓட்டுகள் கிடைத்தன. இந்த மாநாட்டில் துணை அதிபர் வேட்பாளராக வாங் குஷான் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சீன நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஜி ஜிங்பிங் அதிபராக மொத்தமுள்ள 2970 உறுப்பினர்களும் ஒருமித்து வாக்களித்தனர். அதேநேரம் வாங் குஷானுக்கு எதிராக ஒரு உறுப்பினர் வாக்களித்தார், எனவே, அவருக்கு 2,969 வாக்குகள் கிடைத்தன.
கடந்த வருடம் அக்டோபரில் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளராக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷி ஜிங்பிங், இரண்டு முறைக்கு மேல் ஆயுள் முழுவதும் அதிபர் பதவி வகிக்கலாம் என்ற வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது.
இதனால் ஜி ஜிங்பிங், 2023க்கு பின்னும் தொடர்ந்து அதிபர் பதவியில் தொடர முடியும். அவர் 20 லட்சம் வீரர்கள் கொண்ட வலிமையான ராணுவத்தின் ஒட்டுமொத்த தலைமை பதவியான மத்திய ராணுவ ஆணைய தலைவராகவும் இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இதனை தொடர்ந்து அதிபர் மற்றும் துணை அதிபர் இன்று தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் வாழ் நாள் முழுவதும் அல்லது தான் விரும்பும் வரையிலோ அதிபர் பதவியில் நீடிக்க முடியும்.
சீன கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவனர் தலைவர் மாவோ ஜெடாங் கடந்த 1949ம் ஆண்டு முதல் 1976 ஆண்டு வரை சீனாவை ஆட்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments