நாடு முழுவதும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டங்களாக, நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உருவாகிவிட்டன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.



இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை குறிப்பிட்டிருப்பதாவது:
"தூய்மை இந்தியா' திட்டம், வெகுஜன இயக்கமாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 


திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டங்களாக, நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உருவாகியுள்ளன.

அதாவது 3 மாநிலங்களில் உள்ள 101 மாவட்டங்களைச் சேர்ந்த 1,67,226 கிராமங்களில் தற்போது திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லை.



இதற்காக, இதுவரை மொத்தம் 3,48,79,320 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


திறந்தவெளியில் மலம் கழிக்கும் முறையை வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில், "தூய்மை இந்தியா' திட்டத்தை பிரதமர் மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி தொடக்கி வைத்தார்.

Post a Comment

0 Comments

Close Menu