ஐக்கிய நாடுகள் சபையில் கவிஞர் வைரமுத்துவின் கவிதைக்கு நடிகர் ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா நடனமாடினார்.
ஐ.நா.சபையில் உலக மகளிர் தின விழாவின் ஒரு பகுதியாக இந்த நடனம் இடம்பெற்றது. "நடராஜர் ஆராதனை' என்ற நடனாஞ்சலியில் கவிஞர் வைரமுத்து எழுதிய "அவசரத் தாலாட்டு' என்ற கவிதைக்கு ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடினார். "ரத்ததானம்' என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற அந்தக் கவிதை, வேலைக்குச் செல்லும் பெண்களின் துயரம் பற்றியதாகும். இல்லத்தரசிகளாக இருந்த பெண்கள் அலுவலகப் பெண்களாக மாறும்போது இரண்டு சுமைகளையும் அவர்களே சுமக்கிறார்கள். வேலைக்குச் செல்லும் அவசரத்தில் ஒரு தாய் தன் குழந்தைக்குப் பாடும் அவசரத் தாலாட்டாக அந்தக் கவிதை அமைந்துள்ளது.
ஐ.நா.வில் அரங்கேற்றப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் இரண்டாவது கவிதை இதுவாகும். ஏற்கெனவே "வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலரவே' என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் ஐ.நா.வில் பாடியுள்ளார்.
நிகழ்ச்சியின் நிறைவாக உலக அமைதிக்காக மறைந்த இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பாடலுக்கும் ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடினார்.
0 Comments