சாம்சங் ஸ்மார்ட் டிவிக்கள் மூலம் வீடுகளில் வேவு பார்த்தது சிஐஏ!

சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன தொலைக்காட்சி சாதனமான "ஸ்மார்ட் டிவி'க்களில் குறிப்பிட்ட மென்பொருளை பதிவு செய்துள்ளதன் மூலம், அந்த சாதனம் வழியாக வீடுகளில் நடைபெறும் உரையாடல்களை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ ஒட்டுக் கேட்பதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட்டு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:


சாம்சங் "ஸ்மார்ட் டிவி'க்களைப் பயன்படுத்துவோர், வாய்மொழி மூலம் அந்தச் சாதனத்தை இயக்கும் வசதி அதில் உள்ளது. அதற்காக, அந்தச் சாதனத்தில், சிறிய ஒலிவாங்கிக் கருவி (மைக்ரோஃபோன்) பொருத்தப்பட்டுள்ளது.


பயன்படுத்துவோரின் அனுமதியின்றி, அவர்களது குரல் உத்தரவுகள் அந்தத் தொலைக்காட்சி சாதனத்திலிருந்து வேறு எங்கும் ஒலிபரப்பப்படாது.
எனினும், அந்த "ஸ்மார்ட் டிவி'க்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ரகசிய மென்போருள் மூலம், அந்தச் சாதனம் வைக்கப்பட்டுள்ள அறையில் நடைபெறும் உரையாடல்களை சாம்சங் நிறுவனத்துக்குத் தெரியாமலேயே சிஐஏ-வால் ஒட்டுக் கேட்க முடியும் என்பது, அவர்களிடமுள்ள ரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.


அந்த ஆவணங்களில், சாம்சங் "ஸ்மார்ட் டிவி'க்களில் பதிவு செய்யப்பட்டுள்ள மென்பொருளின் பெயர் "வீப்பிங் ஏஞ்சல்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Close Menu