நவம்பர் 21, 2023
தினமணி, இந்து தமிழ் திசை
1)இணையதளம்( tamilnilam ) மூலம் நில அளவை விண்ணப்பம் – புதிய வசதியை தொடங்கி வைத்தார் முதல்வர்.
2)பருவநிலை குறித்த ஐநா மாநாடு எங்கு தொடங்க உள்ளது – ஐக்கிய அரபு அமீரகம்.
3) 2015 ஆம் ஆண்டின் பருவநிலை ஒப்பந்த இலக்கை ( 2030க்குள் 1.5°C) எட்டுவதற்கு உலக நாடுகள் தங்களது கரியமில வாயு வெளியேற்றத்தை 42 சதவீதம் குறைக்க வேண்டியுள்ளது.
ஆனால் 2030க்குள் 2.9°c ஐ தொடும் ஆபத்து உள்ளதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
4)அர்ஜென்டினாவின் அதிபராக பொறுப்பேற்க உள்ளவர் – ஜேவியர் மிலேய்.
5)பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் விருது பெற்ற மாநிலம் – தமிழ்நாடு.
6)தமிழக காவல்துறையின் நுண்ணறிவு பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்க தமிழக அரசு அனுமதி.
இந்தத் தடுப்பு பிரிவு டிஐஜி தலைமையில் செயல்படும்.
7) இந்தியா ஆஸ்திரேலியா இடையே 2-வது 2+2 பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று நடைபெற்றது.
8)தமிழ்நாட்டின் தற்போதைய கருவளர் விகிதம் – 1.4
மக்கள் தொகை கட்டுப்பாட்டில் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்.
9) இந்தியாவில் முதல்முறையாக இரவு நேர வந்து பாரத் ரயில் தொடக்கம்( சென்னை – பெங்களூர்)
0 Comments