தில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 'பத்ம' விருதுகள் இன்று வழங்கபடுகிறது. 
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பத்ம விருதுகளை வழங்கி கெளரவிக்கிறார்.
இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண், கிரிக்கெட் வீரர் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண், தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டது. 
இவ்விருதுகள் இரு கட்டங்களாக வழங்கப்படுகின்றன. பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டோரில் ஒருபகுதியினருக்கு இன்று விருது வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 2ஆம் தேதியும் விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

Close Menu