இந்திய விண்வெளிஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில், தகவல்தொடர்புக்கான ஜிசாட் -6ஏ செயற்கைகோளுடன் வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட உள்ள ஜி.எஸ்.எல்.வி. -எஃப்08 ராக்கெட்டுக்கான 27 மணி நேர கவுன் -டவுன் புதன்கிழமை பிற்பகல் 1.56 மணிக்குத் தொடங்க உள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை மாலை 4.56 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இது இஸ்ரோ அனுப்பும் 12 ஆவது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.
415.6 டன் எடையும், 49.1 மீட்டர் உயரமும் கொண்ட இந்த ராக்கெட் மூலம் அனுப்பப்படும் இந்த ஜிசாட்-6ஏ தகவல்தொடர்பு செயற்கைகோள் 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-6 செயற்கைகோளின் மேம்படுத்தப்பட்ட வடிவமே இந்த ஜிசாட்-6ஏ செயற்கைகோள். பன்முனை எஸ்-பாண்ட், ஒருமுனை சி-பாண்ட் அலைவரிசைகள் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இந்த செயற்கைக்கோள் உதவ உள்ளது.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை இதுவரை 7 முறை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. தற்போது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 8 -ஆவது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments