பொது அறிவு
1. தமிழ்நாட்டின் மிகப் பழமையான அணை – கல்லணை
2. தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை
3. தமிழ்நாட்டின் மிக ஆழமான அணை – சோலையாறு அணை
4. தமிழ்நாட்டின் நீளமான ஆறு – காவிரி
5. தமிழக கடற்கரை மாவட்டங்கள் (வடக்கிலிருந்து தெற்காக)
1. திருவள்ளூர்
2. சென்னை
3. காஞ்சிபுரம்
4. விழுப்புரம்
5. கடலூர்
6. நாகப்பட்டினம்
7. திருவாரூர்
8. தஞ்சாவூர்
9. புதுக்கோட்டை
10. இராமநாதபுரம்
11. தூத்துக்குடி
12. திருநெல்வேலி
13. கன்னியாகுமரி
6. உலகத்தில் பெரும்புயல் உருவாகும் இடங்கள்
1. வட அட்லாண்டிக் பெருங்கடல்
2. பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதி
3. பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதி
4. பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதி
5. இந்தியப் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதி
6. இந்தியப் பெருங்கடலின் தென்கிழக்குப் பகுதி
7. இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதி
7. வனக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட வனச்சட்டங்கள்
1. தமிழ்நாடு வனச்சட்டம் – 1882
2. தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் – 1949
3. தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டம் – 1955
4. வனவுயிரினப் பாதுகாப்புச் சட்டம் – 1972
5. தமிழ்நாடு வனப் பாதுகாப்புச் சட்டம் – 1980
6. பல்லுயிரினப் பரவல் சட்டம் – 2002
8. தமிழ்நாட்டில் காடுகள் அதிகம் கொண்ட மாவட்டம் – நீலகிரி (53.13%)
9. தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டம் – திருவாரூர் (0.01%)
10. தமிழ்நாட்டில் உள்ள 5 தேசிய பூங்காக்கள்:
1. முதுமலை தேசிய பூங்கா (நீலகிரி)
2. கிண்டி தேசிய பூங்கா (சென்னை)
3. மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா (இராமநாதபுரம்)
4. இந்திராகாந்தி தேசிய பூங்கா (கோயம்புத்தூர்)
5. முக்குருத்தி தேசிய பூங்கா (நீலகிரி)
11. தமிழகத்தில் உள்ள யானைகள் சரணாலயம்:
1. நீலகிரி யானைகள் சரணாலயம் (2003)
2. ஆனைமலை யானைகள் சரணாலயம் (2003)
3. கோயம்புத்தூர் யானைகள் சரணாலயம் (2003)
4. ஸ்ரீவில்லிபுத்தூர் யானைகள் சரணாலயம் (2002)
5. தெப்பக்காடு யானைகள் முகாம், முதுமலை (1910)
12. வாழை, மரவள்ளி மற்றும் மலர்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
13. மா, இயற்கை இரப்பர், தேங்காய் மற்றும் நிலக்கடலை உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது.
14. காபி, தேயிலை, சப்போட்டா மற்றும் கரும்பு உற்பத்தியில் தமிழகம் மூன்றாம் இடம் வகிக்கிறது.
15. இந்தியாவில் தமிழகத்தில் தான் கரும்பு மகசூல் ஒரு ஹெக்டேருக்கு (Yield Per hectare) அதிகமாக உள்ளது.

Post a Comment

0 Comments

Close Menu