இந்திய அரசியலமைப்பு : குடியுரிமை
குடியுரிமை
ஒரு நாட்டிற்கும், தனி நபருக்கும் இடையிலான சட்டரீதியான உறவே குடிமை எனக் குறிப்பிடலாம்.
இதன்படி தனிநபர் நாட்டிற்குக் கடமைப்படுகிறார். நாடு அவருக்குப் பாதுகாப்பளிக்க முன் வருகிறது.
இந்த உறவு தேசியச் சட்டங்களினால் நெறிப்படுத்தப்படுகின்றது; சர்வதேசச் சட்டங்களால் அங்கீகரிக்கப்படுகிறது
குடியுரிமை 5 வழிகளில் வழங்கப்படுகிறது.
Art (5) இந்தியாவில் பிறந்தவர்கள்
இந்தியாவில் பிறக்கலாம் 5 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் வசிப்பவர்கள்
Art (6) பாகிஸ்தானில் வசித்து 1948 ஜீலை 19 முன்னர் இந்தியாவிற்கு குடிபெயர்ந்து (அ) அதற்கு பின்னர் இந்தியாவில் ஆறு மாதங்களுக்கு மேல் வசித்து முறைப்படி பதிவு செய்தார்கள்.
Art (7) இந்தியாவில் வசித்து 1947 மார்ச் 1க்கு பின்னர் பாகிஸ்தான் சென்று மீண்டும் குடியேற்ற அனுமதிமூலம் திரும்பியவர்கள்.
Art (8) இந்தியாவில் பிறக்காமல் அவர்கள் பெற்றோர்கள் இந்தியாவில் பிறந்திருத்தல்
இந்திய குடியுரிமை சட்டம் 1955 ல் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது.
குடிமகனின் உரிமைகளும், கடமைகளும்
நாட்டைக் காக்க குடிமகன் / குடிமகள் பயன்படுத்தும் குடிமை மற்றும் அரசியல் உரிமைகள்.
நாட்டிற்குக் குடிமகன் / குடிமகள் ஆற்றும் பொதுநலம் பேணுவது உள்ளிட்டக் கடமைகள்.
குடிமகன் / குடிமகள் நாட்டுப்பற்றுடன் இருத்தல் போன்றவை குடிமகனின் / குடிமகளின் உரிமைகளும் கடமைகளும் ஆகும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் குடியுரிமைகள்
அரசியலமைப்புச் சட்டத்தின் 5 முதல் 8 வரையிலான பிரிவுகள் குடியுரிமையைக் குடிமகனுக்கு / குடிமகளுக்கு அளிக்கின்றன.
இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே வசிப்பவர்கள்.
இந்தியாவில் பிறக்காமல் இந்தியாவில் வாழ்பவர்கள் பெற்றோர்களில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்.
இந்தியாவில் பிறக்காமல் பொதுவாக இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்கள்.
இந்தியாவில் வசித்து 1947 மார்ச் முதல் தேதிக்குப் பின்னர் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்து, பின்னர் குடியேற்ற அனுமதி மூலம் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியவர்கள்.
பாகிஸ்தானில் வசித்து 1947 ஜீலை 19 ஆம் தேதிக்குப் பின்னர் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தவர்கள் அல்லது அந்தத் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்து இங்கே ஆறு மாதங்களுக்கு மேல் வசித்து முறைப்படி பதிவு செய்து கொண்டவர்கள்.
இந்தியாவிற்கு வெளியே வசிக்கின்றவர்கள் – அவர்களே இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் அல்லது அவர்களின் பெற்றோர்களில் ஒருவரோ அல்லது பாட்டியர் பாட்டன்மார்களில் ஒருவரோ இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்டவர்கள் இந்தியக் குடியுரிமை பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
குடியுரிமைச் சட்டம் 1955
1950 ஜனவரி 26 ஆம் தேதிக்குப் பின்னர் இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியக் குடிமக்களாவர்.
1950 ஜனவரி 26 ஆம் தேதிக்குப் பின்னர் இந்தியாவின் வெளியே பிறக்கின்றவரின் தந்தை பிறப்பின்போது இந்தியக் குடிமகனாக இருந்தால் – சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அப்படி பிறந்தவர்களும் இந்தியக் குடிமக்களாவார்கள்.
சில நிபந்தனைக்குட்பட்டு குறிப்பிட்ட முறையில் பதிவு செய்து கொள்பவர்களுக்குக் குடியுரிமை அளிக்கப்படும்.
சில நிபந்தனைக்குட்பட்டு, இயல்பாக்கத்திற்கு முறைப்படி விண்ணப்பிப்பதன் மூலம் வெளிநாட்டினரும் இந்தியக் குடியுரிமை பெறலாம்.
குடியுரிமைத் துறப்பதின் மூலமும், சில காரணங்களால் பறிப்பதன் மூலமும் இந்தியக் குடியுரிமையை இழக்க வேண்டி வரும். மேற்குறிப்பிட்டவை “குடியுரிமைச் சட்டம் 1955 அம்சங்களாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சிறார்கள் நலன் தொடர்புடைய சரத்துகள்
சரத்து 23
கொத்தடிமை, பிச்சையெடுப்பது மற்றும் கட்டாயத்தால் பணியில் ஈடுபடச் செய்வது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.
சரத்து 24
தொழிலகங்கள் முதலியவற்றில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்தல்.
பதினான்கு வயதிற்குக் குறைந்த எந்தக் குழந்தையையும் தொழிலகம் அல்லது சுரங்கத்தில் பணிக்கு அமர்த்தக் கூடாது.
எவ்விதக் கடுமையான பணி செய்வதற்கும் சிறார்களைப் பயன்படுத்தக் கூடாது.
மேலே குறிப்பிட்டுள்ள சரத்துக்களை நடைமுறைப்படுத்தும் நிறைவேற்றப்பட்டன.
அவையாவன
தொழிற்சாலைகள் சட்டம் (1948)
சுரங்கங்கள் சட்டம் (1952)
மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம் (1951)
வியாபாரி கப்பல் போக்குவரத்துச் சட்டம் (1958)
பீடி – சிகரெட் தொழிலாளர் (பணிச்சூழல்) சட்டம் (1966)
குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் (1986).
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மகளிர் நலன் தொடர்புடைய சரத்துக்கள்
சரத்து 14
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.
சரத்து 15
மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் எவ்விதப் பாகுபாடும் செய்யக் கூடாது.
சரத்து 15 (3)
மகளிர் மற்றும் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கு அரசு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது. இந்தச் சரத்தினை நிலை நாட்டும் வண்ணம் நீதிமன்றத் தீர்ப்புகளும் வெளியாகியுள்ளன.
இந்தச் சரத்தின் அடிப்படையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
உள்ளாட்சித் துறையில் மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சரத்து 21
வாழ்க்கை வாழ்வதற்கும், தனிமனிதச் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு அளித்தல். இந்தச் சரத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்புகள், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலினக் கொடுமைகளை எதிர்த்துப் பெண்களின் உரிமைகளைக் காக்க வழி செய்துள்ளன.
அரசு நெறிமுறைக் கோட்பாடு
சரத்து 39 (அ) – ஆண் – பெண் – தொழிலாளர் உடல் நலம்; குழந்தைகளின் இளம்பிராயம் பாதிக்கப்படாமல் வயதிற்கும் வலிமைக்கும் ஒவ்வாத பணிகளை மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தலுக்கு தடைவிதித்தல்.
சரத்து 39 (ஊ) – குழந்தை பருவமும், இளமையும் சுரண்டலிலிருந்து பாதுகாக்கப்படுதல்.
சரத்து 45 – பதினான்கு வயது வரை அனைத்துச் சிறார்களும் இலவசக் கல்வி வசதி.
சரத்து 51 அ (K) – 6 முதல் 14 வயது வரையில் குழந்தைகள் கல்விபெறச் சூழ்நிலையை ஏற்படுத்துவது பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரின் கடமையாகும்.
1960 இல் குழந்தைகளைச் சுரண்டலிலிருந்து பாதுகாக்கவும் நல்ல ஆரோக்கியமான சூழலில் குழந்தைகளின் அறிவை வளர்க்கவும், குழந்தை காப்பகங்கள் ஏற்படுத்தி அவற்றில் இளம் குற்றவாளிகளையும், புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளையும் தங்க வைத்தல் பொருட்டு “குழந்தைகள் நலச் சட்டம்” இயற்றப்பட்டது.
1979 ஆம் ஆண்டு, சர்வதேசக் குழந்தைகள் ஆண்டாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட “இளம் குற்றவாளிகள் நீதிச்சட்டம்”, பிச்சையெடுப்பதில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகள், வீடற்ற அனாதைக் குழந்தைகள், பெற்றோர்கள் இருந்தும் அவர்களது பராமரிப்பிலிருந்து விடுபட்டு குற்றவாளிகளாக மாறிய குழந்தைகள், நடத்தை கெட்ட வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள குழந்தைகள், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் ஆகியோரை இனம்கண்டு, அவர்களின் நலன் பாதுகாக்க வழி செய்துள்ளது.
இச்சட்டம் “இளம் குற்றவாளிகள் நலக்கழகம்” என்ற அமைப்பை ஒவ்வொரு மாநில அளவிலும் ஏற்படுத்தி, புறக்கணிக்கப்பட்ட இளம் குற்றவாளிகளை முறைப்படுத்த வகை செய்துள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி தொடர்புடைய சரத்துக்கள்
சரத்து 21 A – கல்வி உரிமை – சட்ட ரீதியாக இலவச மற்றும் கட்டாயக் கல்வியை 6 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மாநில அரசு வழங்கலாம்.
சரத்து 15 (5) – சமூக மற்றும் கல்வி அடிப்படையில் பின்தங்கிய பிரிவினர், தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பயிலுவதற்கும் மாநில அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்யத் தடையேதும் இல்லை.
பகுதி III சரத்து 29 – ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமகளுக்கும் அவர்கள் விரும்பும் பண்பாட்டு மற்றும் கல்வி உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது.
சரத்து 30 – மதம், மொழி அடிப்படையில் உள்ள சிறுபான்மையினர் தங்களின் விருப்பத்தின்படி, கல்வி நிறுவனங்களை உருவாக்கி, நிர்வகிக்கும் உரிமை வழங்கப்படுகிறது.
சரத்து 45 – பதினான்கு வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வசதி செய்தல் வேண்டும்.
சரத்து 46 – தாழ்த்தப்பட்ட பிரிவினர், பழங்குடியினர் மற்றும் ஏனைய பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் கல்வி மற்றும் பொருளாதார நலனை மேம்படுத்துதல்.
சரத்து 338 – தேசிய தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்.
இயலாதோர் நலன் தொடர்பான சரத்துக்கள்
சரத்து 41 – அரசுக்குத் தன்னுடைய பொருளாதார நிலைக்கு ஏற்ப வேலையற்றவர்களுக்கு, வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இயலாதோர்கள் ஆகியோர்க்குப் பணியாற்றுவதற்கு கல்வி பெறுவதற்கும் மற்றும் பொதுவான உதவி பெறுவதற்கும் ஏற்பாடு செய்யும் உரிமை அளிக்கப்படுகிறது.
உடல், மன இயக்கத்தில் குறைபாடுடையோர், இயலாதோர் ஆவார்கள். குறிப்பாக கண், வாய், உடல் மற்றும் மூளைக்குறைபாடுகள் உள்ள இயலாதோர்க்கு அரசு, நலத்திட்டங்கள் வழியே அவர்களின் வளர்ச்சிக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கோத்தாரி கல்விக்குழு (1966) கல்வியை இயலாதோருக்கு, பயனளிக்கும் வகையில் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
1986 மற்றும் 1992 தேசியக் கல்விக் கொள்கைகளில் “இயலாதோர்களுக்கான சிறப்புக்கல்விக்கு” முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன.
1956 ஆம் ஆண்டு, சமூக நலத்துறை, இயலாதோர் சிறப்புக் கல்விப் பொறுப்பை மேற்கொண்டது.
1971 இல் இயலாதோர் ஒருங்கிணைப்புக் கல்வித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
1987 ஆம் ஆண்டு, இதனைக் கல்வித் துறைக்கு மாற்றி அமைத்தனர். அரசுடன், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படுகின்றன.
மத்திய – மாநில – உள்ளாட்சி அரசமைப்புகள்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் “சட்டங்களின் சட்டமாக” உள்ளது. இதுவே முதன்மையான, அடிப்படையான ஆவணம் ஆகும்.
இது தேசத்தின் விருப்பாற்றலைப் (The will of the Nation) பிரதிபலிக்கிறது.
இந்திய நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் நீதி பற்றிய கொள்கைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
இதன் அடிப்படையில் இந்திய ஆட்சி முறை மூன்றடுக்கு ஆட்சி அமைப்பைக் கொண்டுள்ளது . அவை.
மத்திய அரசு (Central Government)
மாநில அரசு (State Government)
உள்ளாட்சி நிர்வாகம் (Local Self Government)
மத்திய அரசு
இந்தியா உலக அளவிலேயே நீண்ட அரசியலமைப்புக் கொண்ட, மதச்சார்பற்ற, குடியரசு நாடு ஆகும்.
குடியரசுத் தலைவர் இதன் பெயரளவிலான (Nominal) ஆட்சித் தலைவர்.
பிரதமரின் தலைமையிலான அமைச்சரவையின் ஆணைப்படியே செயல்படுகிறார்.
எனவே குடியரசுத் தலைவர் பெயரளவிலான அதிகாரத்தையும் (Golden Zero), பிரதம அமைச்சர் உண்மையான அதிகாரத்தையும் கொண்டுள்ளார்.

0 Comments