இந்திய அரசியலமைப்பு : முகப்புரை

முகப்புரை

முகப்புரை என்பது இயற்றப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும்.

முதன்முதலில் முகப்புரையை அரசியலமைப்பில் வழங்கிய நாடு அமெரிக்கா அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் பல நாடுகள்
பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களால் டிசம்பர் 1946 ல் இந்திய அரசியல் நிர்ணய சபையின் குறிக்கோள்கள் பற்றிய தீர்மானம் முன்மொழியப்பட்டு ஜனவரி 22 1947 ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்பு இது இந்திய அரசியலமைப்பின் முகப்புரையாக மாற்றப்பட்டது.
இந்திய அரசியலமைப்புக்கு முகப்புரை வேண்டும் என்று கூறியவர் ஜவஹர்லால் நேரு
மக்களே அதிகாரத்தின் தோற்றுவாய் என்று இந்திய அரசியலமைப்பின் முகப்புரை கூறுகிறது.

இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
இந்திய அரசியலமைப்பு பல்வேறு பரிமாணங்களில் தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது.
மிகநீண்ட விளக்கமாக எழுதப்பட்ட அரசியலமைப்பாகும்.
22 பகுதிகள் 395 சரத்துக்கள் 8 அட்டவணைகள் உள்ளடக்கிய அமைப்பாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்பு தற்பொழுது 445 விதிகளுடன் 12 அட்டவணைகளை 24 பகுதிகள் உள்ளடக்கிய 94 அரசியலமைப்புத் திருத்தங்கள் செய்யப்பட்டுத் திகழ்கின்றன.
எவ்வித முரண்பாடுகளும் எழக்கூடாது என்பதற்காக, அரசின் அனைத்துக் கூறுகளும் தெளிவாகவும் விளக்கமாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன.
இவற்றையும் மீறி முரண்பாடுகள் ஏற்பட்டால், அவற்றைத் தீர்க்கும் பொறுப்பு நீதித் துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பாதுகாவலனாக, “நீதித்துறை” செயலாற்றுதல் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய அரசியலமைப்பின் சிறப்பு பண்புகள்
இந்திய அரசியலமைப்பு சற்றே நெகிழும் மற்றும் நெகிழா தன்மை கொண்டது
சில அரசியலமைப்பு சட்டங்கள் சாதாரண பெரும்பான்மையில் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும்
இந்திய அரசியலமைப்பு உலகிலேயே மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பாகும்
அரசியலமைப்பு உருவாகும் போது 395 உறுப்புகளும் 8 அட்டவணைகளும் 22 பகுதிகளும் இருந்தன.(அரசியலமைப்பு எழுதப்படாத நாடு இங்கிலாந்து)
பாராளுமன்ற முறை அரசு
மத்தியில் வலிமையுடன் கூடிய கூட்டாட்சி
அடிப்படை உரிமைகள் அடிப்படை கடமைகள் அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்
மதச்சார்பற்ற நாடு
நீதித்துறையின் சுதந்திரம்
வயது வந்த அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை
அவசர நிலை பிரகடனம்
ஒற்றை குடியுரிமை
சட்டத்தின் ஆட்சி.
அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்
சட்டங்கள் இயற்றும்போதும் அவற்றை நடைமுறைப்படுத்தும் போதும் பின்பற்ற வேண்டிய கருத்துக்கள் கொண்ட தொகுப்பே “அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்” எனலாம்.

இந்திய அரசியலமைப்பு முகவுரையில் குறிப்பிட்டுள்ள சமய, பொருளாதார, அரசியல், நீதி, சமத்துவம், சுதந்திரம், ஒற்றுமை, ஒருமைப்பாடு, சகோதரத்துவம், தனிமனித கண்ணியம் ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கு வழிகாட்டவல்ல கொள்கைகளாக அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் திகழ்கின்றன.
இந்திய அரசியலமைப்பின் நான்காம் பாகத்தில், அரசாங்கம் சட்டம் இயற்றும் பொழுது பின்பற்ற வேண்டிய அறநெறிக் கோட்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.
பிரெஞ்சுப் புரட்சியின் மானிட உரிமைப் பிரகடனம், அமெரிக்க விடுதலைப் பிரகடனம், அயர்லாந்து அரசியலமைப்பு, காந்தியக் கொள்கைகளின் தாக்கத்தினால் அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் உருவாயின.
இந்திய அரசியலமைப்பில் நான்காவது பகுதியில் “36 முதல் 51 விதிகள்” வரை உள்ள பகுதியில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன.
அடிப்படை உரிமைகளுக்கு நீதிமன்ற உத்தரவாதம் இருக்கும்போது, அறநெறிக் கோட்பாடுகளுக்குத் தார்மீக உத்தரவாதம் மட்டுமே உள்ளன. இன்றைய நிலையில் அறநெறிக் கோட்பாடுகள் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
மக்கள் நலனை அடைய அரசு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்

சரத்து 38
சமூகப் பொருளாதார அரசியல் நீதி, தேசிய வாழ்வின் அனைத்து அமைப்புகளிலும் இருக்கும்படி சமுதாய அமைப்பை உருவாக்கி மக்கள் நலனைப் பேண வேண்டும். வருவாய் ஏற்றத் தாழ்வை நீக்க வேண்டும்.

சரத்து 39
அனைவருக்கும் வாழ்க்கைத் தேவைகளைப் பரவலாய் அளித்தல், சமுதாயப் பொருள் வளங்களைப் பொது நலனுக்காக நியாயமான முறையில் பங்கிடுதல்.
மக்களின் பொது நலனுக்குக் கேடு விளையும் வண்ணம் வளங்களும், உற்பத்தியும் ஓரிடத்தில் மட்டுமே குவிவதைத் தடுத்துப் பொருளியலைச் சீரமைத்தல்.
ஆண், பெண்களுக்கு, சமவேலைக்குச் சம ஊதியம், உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்காத வேலை வாய்ப்புகளை ஆண், பெண் குழந்தைகளுக்கு அளித்தல்.
குழந்தைகளையும், இளைஞர்களையும் சுரண்டலிலிருந்தும் ஒழுக்கக் கேடுகளிலிருந்து பாதுகாத்தல்.

சரத்து 39 A
சமநீதியும் இலவசச் சட்ட உதவியும் அளித்தல்.
அடிப்படை உரிமைகளும் கடமைகளும்

மக்களுக்குச் சொத்துரிமை, பேச்சுரிமை போன்ற அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்பின் III ஆம் பகுதி தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
இவ்வுரிமைகள் பறிக்கப்பட்டால் நீதிமன்றத்தை அணுகி, அடிப்படை உரிமைகளைப் பெறலாம். உரிமைகளைப் பெறுவது போன்றே கடமையை ஆற்றுவது அவசியமாகும்.
அரசியலமைப்புச் சட்டங்கள், தேசியக் கொடி, நாட்டைப் பாதுகாத்தல் போன்ற பதினோரு அடிப்படைக் கடமைகளை வலியுறுத்துகின்றன.
இவை 86 ஆவது திருத்தத்தின் வழியாக விதிக்கப்பட்டுள்ளன.

அடிப்படை உரிமைகள்
இந்திய அரசியலமைப்பு, குடிமக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குத் தேவையான உரிமைகளை “அடிப்படை உரிமைகளாகக்” கொடுத்துள்ளது.
தனிமனிதன், தன் சொந்த நலத்துடன், சமுதாய நலத்தையும் பேணிப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட நெறிமுறையே “அடிப்படை உரிமைகளாகும்”.
சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள், தனிமனிதனின் கல்வி, அறிவு ஆளுமை வளர்ச்சிக்கு வழிவகுத்து, தனிமனிதனை மேம்படுத்தி அவற்றின் வழியாகச் சமுதாய மற்றும் தேசத்தின் மேம்பாட்டிற்கு உறுதுணையாக உள்ளது.

அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றபொழுது, நீதிமன்றங்களில் முறையீடு செய்து நீதிப் பெறலாம். “உரிமைகள் இன்றி மனிதனால் நல்ல வாழ்க்கை வாழ இயலாது” என்பது லாஸ்கியின் கருத்தாகும்.
இந்திய அரசியலமைப்பில் மூன்றாவது பகுதியில் ஏழு வகையான அடிப்படை உரிமைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை 12 முதல் 35 வரையில் உள்ள சரத்துகளில் அடங்கியுள்ளன.
அடிப்படைக் கடமைகள்
உரிமைகளும் கடமைகளும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். ஒரு உரிமைக்கும் இணையாக ஒரு கடமை உண்டு. ஒழுங்காக நிறைவேற்றப்பட்ட உரிமையிலிருந்து கடமைகள் எழுகின்றன.

ஒவ்வொருவரும் தங்களின் கடமையை நிறைவேற்றினால் உரிமைகள் காக்கப்படும். உரிமைகள் பணிகளுக்குத் தொடர்பு கொண்டவை.

இந்திய அரசியல் சட்டம் பகுதி IV அ, பிரிவு 51 அ இதில் உள்ள 42 ஆவது அரசு சட்டத்திருத்தம் இந்தியக் குடிமக்களின் கடமைகளை வலியுறுத்துகிறது.

Post a Comment

0 Comments

Close Menu