மீத்தேன்:-
****************************************
மெத்தேன் அல்லது மீத்தேன் அல்லது கொள்ளிவாய்ப் பிசாசு அல்லது சாணவாயு (English: Methane)[1] என்பது ஒரு கரிமமும் நான்கு நீரியமும் கொண்ட சேர்மமாகும். இது ஓர் அடிப்படையான வளிமமாகும். இது ஐதரோ-கார்பன் (கரிம-நீரதை) வகையைச் சார்ந்த ஒரு மூலக்கூற்றாலான பொருள்.[2] வீடுகளில் உணவு சமைப்பதற்கும், நீரைச் சூடேற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் எரிவளிமத்தில் ஒரு முதன்மையான பங்கு இந்தச் சாணவளிமத்துக்கு உண்டு. முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்ட சாண வளிமத்தை நுகர்ந்தால் எந்த மணமும் இருக்காது என்றாலும் எரியக்கூடிய தன்மை உடைய வளிமம் ஆகையால், எங்காவது கசிவு இருந்தால் உணர்வதற்கு எளிதாக நம் பயன்பாட்டிற்காக இவ்வளிமத்தில் சிறிதளவு கந்தகம் (சல்பர்) என்னும் வேதியியல் தனிமப்பொருள் கலந்த நெடி வீசக்கூடிய பொருளைச் சேர்ப்பார்கள்.[3] [4]
இரவு நேரங்களில் சதுப்பு நிலப்பகுதிகளில் இவ்வளிமம் வெளிப்படுவதால் திடீர் என்று ஒரு தீப்பந்தம் எரிவது இவ்வளிமம் எரிவதை மக்கள் கண்டு இதனைக் கொள்ளிவாய்ப் பிசாசு என்று அழைப்பது உண்டு. எனவே இதற்குக் கொள்ளிவளி என்றும் பெயர் உண்டு (எரியக்கூடிய வளிமம்; கொள்ளி = எரி).

Post a Comment

0 Comments

Close Menu