''திருநங்கையர் தினம் - ஏப்ரல் 15''
தமிழகத்தில் திருநங்கையர் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்ட ஏப்ரல் 15 ஆம் தேதியை திருநங்கையர் தினம் (Transgender Day, April 15) ஆக கடைப்பிடிக்கப்படுக்கிறது.
தமிழகத்திலுள்ள அரவாணிகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பை அளிப்பதற்கு தேவையான திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் செயல்படுத்தவதற்காக அரவாணிகள் நல வாரியம் அப்போதைய முதல் அமைச்சர் கருணாநிதியால் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. ஆரம்பக் கட்டமாக இதன் செயல்பாட்டுக்காக ரூ. 1 கோடி ஒதுக்கி வழங்கப்பட்டது.
அரவாணிகளை சிறப்பிக்கும் வகையில், இந்த ஆணை வெளியிடப்பட்ட ஏப்ரல் மாதம் 15 ஆம் நாளை திருநங்கையர் நாள் என அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரவாணிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையினை பரிசீலனை செய்து, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் ஆம் நாள் திருநங்கையர் தினம் ஆக கடைப்பிடிக்கப்படும் என கருணாநிதி உத்தரவிட்டார்.
இந்தியாவிலே முதன் முதலாக தமிழ்நாட்டில்தான் அவர்களுக்கு என தனித் தினம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
திருநங்கை எனப்படுவோர் ஆண் உறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும்.
பெண்ணும் ஆணும் இயற்கையின் படைப்பு என்பதில் எந்த அளவு உண்மை இருக்கிறதோ, அதைப் போலவே அலிகள் என்றழைக்கப்படும் அரவாணிகளையும் இயற்கைதான் படைத்திருக்கிறது என்பதில் உண்மை இருக்கிறது.
பெண் என்பது ஒரு பாலினம்; ஆண் என்பது இன்னொரு பாலினம், அரவாணி என்பது மூன்றாம் பாலினம் எனக் கொள்ளலாம். ஆனால், சமூகத்தில் நிலவுகிற சட்டங்கள் மூன்றாம் பாலினத்தை அங்கீகரிப்பதில்லை.
சமூகத்தின் பொதுத் தளங்கள் யாவும் அரவாணிகளை அருவருப்பான மனநிலை சார்ந்த மக்கள் பிரிவாகவே புரிந்து கொண்டிருக்கின்ற
பல காலமாக ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமில்லாமல் தனிப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள், அரவாணிகள் என்றால் மிகை இல்லை. இவர்கள் பொதுவாக தங்கள் குடும்பச்சூழலை விட்டு விலகி, அரவாணிகள் எனும் குழுமத்தில் கலந்து விடுகிறார்கள்.
பல காலமாக ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமில்லாமல் தனிப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள், அரவாணிகள் என்றால் மிகை இல்லை. இவர்கள் பொதுவாக தங்கள் குடும்பச்சூழலை விட்டு விலகி, அரவாணிகள் எனும் குழுமத்தில் கலந்து விடுகிறார்கள்.
உலகம் முழுக்க திருநங்கைகள் இருக்கிறார்கள். இது இயற்கையின் பாதிப்பு எனலாம். ஆணும் பெண்ணும் சேர்ந்த உருவ அமைப்பு.
ஆண்களின் குரோமோசோம்கள் எக்ஸ், ஒய் என்று இருக்கும். இந்த குரோமோசோம்கள் பெண்களில் எக்ஸ், எக்ஸ் இருக்கும். ஆணும் பெண்ணும் இணையும் போது ஆணின் ஒரு எக்ஸ் குரோமோசோமும் பெண்ணின் ஒரு எக்ஸ் குரோமோசோமும் இணைந்தால் பெண் குழந்தை பிறக்கும். மாறாக ஆணின் ஒரு ஒய் குரோமோசோமும் பெண்ணின் ஒரு எக்ஸ் குரோமோசோமும் இணைந்தால் ஆண் குழந்தை பிறக்கும்.
இது அடிப்படை அறிவியல்.
ஆனால், சில நேரங்களில் அரிதாக பெண்ணின் எக்ஸ் குரோமோசோமுடன் ஆணில் உள்ள எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம் இணைந்தால் அந்தக் குழந்தையின் உடலில் எக்ஸ், எக்ஸ், ஒய் குரோமோசோம்கள் இருக்கும். இந்தக் குழந்தைகள் பொதுவாக ஆண் குழந்தைகளாக பிறக்கும். பருவ வயதை அடையும் போது ஆணுக்குரிய மாற்றங்களும் பெண்ணுக்குரிய மாற்றங்களும் ஏற்படுவதால் அவர்கள் முழுமையான ஆண் அல்லது பெண்ணாகவோ இல்லாமல் திரு நங்கையாக மாறுகிறார்கள்.
ஒரு அரவாணியின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் கூத்தாண்டவர் திருவிழா. அந்த அளவிற்கு அரவாணிகளின் உணர்வோடு பின்னிப் பினைந்த ஒரு சமுதாயச் சடங்கு அது. அரவாணிகள் சமூகத்திற்கென்றே தனித் துவ அடையாளமாக விளங்கும் இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படுகிறது.
வருடத்தில் இந்த திருவிழா நடக்கும் 5 நாட்கள்தான் அவர்கள் வாழ்க்கையின் சந்தோஷமான நாட்கள். பல்வேறு இடங்களில் இருந்து வரும் அவர்கள் விழுப்புரத்தில் ஒன்று கூடுகிறார்கள். யாருடைய இடையூறும் இன்றி இங்குதான் சந்தோஷமாக, தோழிகளோடு பேசி, ஆடிப்பாடி மகிழ்கிறார்கள்.
0 Comments